கரோனா தொற்றால் பாதித்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

15 views
1 min read
மருத்துவக்குழுவிடம் அத்தியாவசிய பொருட்களை ஒப்படைத்த தன்னார்வலர்கள்.

மருத்துவக்குழுவிடம் அத்தியாவசிய பொருட்களை ஒப்படைத்த தன்னார்வலர்கள்.

வாழப்பாடி: வாழப்பாடி வட்டாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, பேளூர் வட்டார சுகாதார நிலையம், துளி இயக்கம் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், நேற்று செவ்வாயக்கிழமை வழங்கப்பட்டது.

குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் குடும்பத்தலைவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், இவரது குடும்பத்தினர் அத்தியாவசியப் பொருட்களின்றி அவதிக்குள்ளாகின்றனர். எனவே. வாழப்பாடி வட்டாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துளி தன்னார்வ இயக்கம் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலம் தலைமையில், துளி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், அரிமா சங்கத் தலைவர் ஜவஹர், செயலர் பெரியார்மன்னன், மருத்துவர் பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர், சுகாதார ஆய்வாளர் செல்வபாபு உள்ளிட்ட மருத்துவக் களப்பணியாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். நிறைவாக, சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் நன்றி கூறினார்.

வருவாய் குறைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் களிப்பணியாளர்கள் நேரடியாக சென்று அத்தியாவசிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply