கரோனாவால் உயிரிழந்த மூத்த நடிகர்

21 views
1 min read
arun1

படம் – twitter.com/SVFsocial

 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூத்த வங்காள நடிகர் அருண் குஹாதகுர்தா மரணமடைந்துள்ளார். 

லாப்டாப் (2012), பிஷோர்ஜோன் (2017), சினிமாவாலா (2016) போன்ற படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர் மூத்த வங்காள நடிகரான அருண் குஹாதகுர்தா. சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அருண், நேற்று கொல்கத்தாவில் காலமானார். 

இதையடுத்து வங்காளக் கலைஞர்கள் பலரும் அருணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி கூறியதாவது: சிறந்த நடிகரை நாம் இழந்துவிட்டோம். சினிமாவாலா, பிஷோர்ஜோன் போன்ற படங்களில் வெளிப்பட்ட சிறப்பான நடிப்பை நாம் என்றும் நினைவுகொள்வோம் என்றார்.

பிஷோர்ஜோன் படத்தில் அருணுடன் இணைந்து நடித்த அபிர் சேட்டர்ஜி கூறியதாவது: அருமையான மனிதர். மிகச்சிறந்த நடிகர். வேதனையான காலக்கட்டம் இது என்றார்.

TAGS
Bengali actor

Leave a Reply