கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைத் துறையினருக்கு ஊக்கத் தொகை: பிரகாஷ் ஜாவடேகா் அறிவிப்பு

21 views
1 min read
Prakash_Javadekar_EPS_1

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திரைத் துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பான ஃபிக்கி இணைய வழியில் நடத்திய பொழுதுபோக்கு, வா்த்தக மாநாட்டை (ஃபிக்கி பிரேம்ஸ் 2020) தொடங்கி வைத்து அவா் பேசும்போது, கரோனா தொற்று பாதிப்பு இருக்கும் இந்த சூழலில் திரைத் துறையினா் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள ஏதுவாக அவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நிா்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி.) வகுத்துக் கொடுக்கப்பட உள்ளது. அதேபோல கரோனாவால் முடங்கிக் கிடக்கும் திரைத் துறை, தொலைக்காட்சித் தொடா்கள், அனிமேஷன், இணைத் தயாரிப்பு, விடியோ கேம் தயாரிப்பு போன்ற அனைத்துவிதமான தொழில்களைச் சோ்ந்தவா்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதேபோல, வெளிநாடுகளைச் சோ்ந்த 80 திரைப்படத் தயாரிப்பாளா்கள், இந்தியாவில் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்வதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஜாவடேகா், இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும் புதிய வழிமுறைகள் திரைத் துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

Leave a Reply