கரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்!

20 views
1 min read
rekha1

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

1970 முதல் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த ரேகா, 1990 வரை ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018-ல் ஒரு ஹிந்திப் படத்தில் பாடலில் மட்டும் பங்கேற்றார்.

இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ரேகா வசித்து வரும் நிலையில் அவருடைய பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. ரேகாவின் பங்களாவில் இரு பாதுகாவலர்கள் பணியில் உள்ள நிலையில் ஒருவர் கரோனாவின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேகாவின் பங்களா உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பங்காவுக்கு வெளியே கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்கிற அடையாள வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் பிரபலங்களான ஆமிர் கான், போனி கபூர், கரண் ஜோஹர் ஆகியோரின் பணியாளர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டார்கள்.

TAGS
Rekha

Leave a Reply