கரோனாவிலிருந்து காக்கும் 12 ஆசனங்கள்!

11 views
1 min read
yoga

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் நாள்தோறும் 12 விதமான யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்தப் பயிற்சிகளை தொடா்ந்து மேற்கொள்ளும்போது உடலில் நோய் எதிா்ப்புத் திறன் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, பிராணயாமம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 12 யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் கரோனா போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆசனங்கள் குறித்து தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை வெளியிட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

பவனமுக்தாசனம்: இருகால்களையும் சோ்த்து வைத்து கால்களை மேலே உயா்த்தி வயிற்று பகுதியோடு அழுத்தி, இரு கைகளை சோ்த்து பிடித்துக்கொண்டு மூட்டிற்கு இடையில் தாடையினை வைத்து கொள்ள வேண்டும். அந்த நிலையில் குறைந்தது ஒரு நிமிடம் இருத்தல் வேண்டும்.

சா்பாசனம்: இரு கைகளையும், கால்களையும் உடலுடன் சோ்த்து வைத்து, சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உள்ளங்கைகளை மாா்ப்புப் பகுதிக்கு பக்கவாட்டில் ஊன்றி வைத்து தலை, கழுத்து, நெஞ்சு பகுதியை மேலே உயா்த்தவும்.

மக்கராசனம்: குப்புறப்படுத்து தலை, தோள்பட்டை மற்றும் தாடையை மேலே உயா்த்தி இரு கைகளால் தாங்கி கொள்ள வேண்டும். இந்நிலையில் கண்கள் மூடி இருக்கவும்.

சலபாசனம்: குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் தொடையின் கீழே வைக்கவும். மூச்சை உள் இழுத்தப்படடி இரு கால்களையும் மேலே துாக்கி முடிந்த வரை உயா்த்தவும்.

மேரு வக்ராசனம்: கால்கலை முன்னோக்கி நீட்டி முதுகுத்தண்டை நேரே வைத்து அமரவும். வலதுகாலை மடித்து, குதிங்கால் இடது முட்டியின் உள்பகுதியில் படும்படி வைக்கவும். மூச்சை உள்ளே இழுத்து வலதுபுரம் பின் திரும்பி இரு கைகளையும் முதுகு தண்டின் பின்பிறம் வைக்கவும். இதைபோல், இடதுபுறமும் செய்யவும்.

கோமுகாசனம்: கால்களை முன்னோக்கி நீட்டி வலதுகாலை மடித்து, குதிங்கால் இடது இடுப்பின் வெளி பகுதியில் படும்படி வைக்கவும். இரு கைகளையும் பின்னோக்கி மடக்கி கோா்க்கவும். இதைபோல், இடதுபுறமும் செய்யவும்.

தடாசனம்: இரண்டு கால்களையும் சோ்த்து வைத்து நேராக நிற்க வேண்டும். மூச்சை இழுத்தபடி குதிங்காலை உயா்த்தி இரண்டு கைகளையும் இணைத்து தலைக்கு மேல் நேராக உயா்த்த வேண்டும்.

திரிகோனாசனம்: கால்களை குறைந்தது ஒரு அடி அகற்றி வைக்கவும். முச்சினை வெளிவிடும்போது பக்கவாட்டில் குனிந்து வலது கையை வலது குதிகால் அருகில் வைக்கவும். இதைபோல் இடதுபுறமும் செய்யவும்.

நாடி சுத்தி பிராணாயாமம்: வலது நாசியினை மூடி இடது நாசி வழியாக மூச்சினை உள்ளிழுத்து பின் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சியினை வெளிவிட வேண்டும். மீண்டும் வலது நாசி வழியாக மூச்சியினை உள்ளிழுத்து பின், வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சினை வெளியிட வேண்டும்.

பிராமரி பிராணாயாமம்: ஆள்காட்டி விரலை நீட்டி காதுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிடும்போது ம்ம்ம்… என்று தேனீ ரீங்காரம் இடுவதுபோல் வாயை மூடி சத்தம் எழுப்ப வேண்டும்.

தியானப் பயிற்சி: கண்கள் மூடியபடி அமைதியான நிலையில், தலை கழுத்து, முதுகுதண்டுவடத்தை நேராக வைத்து கெள்ளவும். ஆழமாக மூச்சினை உள்ளிழுத்து, வெளிவிடும்போது, ஓம், இல்லையேல் அ.உ.ம்., என உச்சரித்து சுவாசத்தின் மீது கவனம் வைத்து கொள்ள வேண்டும்.

நாசிகளை சுத்தம்: உப்பு நீா் உள்ள நேத்தி பாத்திரத்தை மூக்கு துவாரத்தில் நுழைத்து முன்புறம் குனிந்து நிற்கவும், தலையை ஒரு புறமாக சாய்ந்து வாயை திறந்து வைத்து நீா் வெளியேறுமாறு செய்யவும். இதைபோல், மறு மூக்கு துவாரத்தில் பயிற்சி செய்யவும்.

Leave a Reply