கரோனாவில் இருந்து குணமடைந்து 60 நாள்களுக்குப் பிறகும் நீடிக்கும் அறிகுறிகள் 

16 views
1 min read
COVID-19 symptoms persist even after 60 days of recovery: Study

கரோனாவில் இருந்து குணமடைந்து 60 நாள்களுக்குப் பிறகும் நீடிக்கும் அறிகுறிகள் 

புது தில்லி: இத்தாலியில் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 87.4% பேருக்கு அதில் இருந்து மீண்டு 60 நாள்களுக்குப் பின்னரும் கூட அறிகுறிகளில் குறைந்தது ஒன்று தொடர்ந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கரோனாவில் இருந்து மீண்டாலும் சில அறிகுறிகள் குறிப்பாக தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருப்பதாகவும், ஒரு சிலர் மட்டுமே கரோனாவில் இருந்து மீண்டதுமே அறிகுறிகளும் மறைந்து போய்விட்டதாக அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் என்ற மருத்துவ இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் நீடிப்பது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் மற்றும் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், இத்தாலியில், கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய பிறகும் அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பை அளிக்கும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதாவது, கடுமையான கரோனா தொற்றுக்கு உள்ளாகி, தொடர்ந்து மூன்று நாள்கள் காய்ச்சல் இல்லாதது உறுதி செய்யப்பட்டு, அறிகுறிகள் குறைந்து, இரண்டு முறை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகள் இந்த சேவை மையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

கரோனா அறிகுறி தெரிய வந்த  நாளில் இருந்து சராசரியாக 60.3 நாள்களுக்கு, கரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், 12 சதவீதம் பேருக்கு கரோனா அறிகுறி முற்றிலும் குறைந்துவிட்டது, 32 சதவீதம் பேருக்கு ஒன்று அல்லது 3 அறிகுறிகள் இருந்தன. 55 சதவீதம் பேருக்கு 3 அல்லது அதற்கும் மேற்பட்ட கரோனா அறிகுறிகள் நீடித்தது தெரிய வந்துள்ளது என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TAGS
coronavirus

Leave a Reply