கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

14 views
1 min read
 குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு

 குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு

 

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்.. சுமார் 9,000 பேருக்கு கரோனா எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அது என்ன?

இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து  மொத்த பாதிப்பு 7,19,665 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 20,160 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 4,39,948 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 2,59,557 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 
 

TAGS
coronavirus

Leave a Reply