கரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் எடியூரப்பா

25 views
1 min read
Karnataka CM BS Yeddiyurappa to work from home after staff members test positive

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

வீட்டு ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

முதல்வரது வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநர் மற்றும் சமையல் பணியாளர் ஒருவருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடியூரப்பா தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 

தான் நலமாக இருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அதே நேரத்தில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாக, முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகம் சில தினங்களுக்கு முன்னதாக மூடப்பட்டது. 

TAGS
coronavirus

Leave a Reply