கரோனா: அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூடல்

20 views
1 min read
hosp

மருத்துவமனை, அஞ்சலகப் பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, வீரவநல்லூர் அஞ்சல் அலுவலகம், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 4 செவிலியர்களுக்கு தொடர்ந்து கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையை மூடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடத்து அரசு மருத்துவமனை மூடப்பட்டு புறநோயாளிகள் பகுதி, உள்நோயாளிகள் பகுதி, பிரசவ பகுதி, அவசர சிகிச்சைப் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் 3 நாள்களுக்கு மூடப்பட்டன. 

தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீரவநல்லூர் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் கூனியூரைச் சேர்ந்த 30 வயது ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் மூடப்பட்டு வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் வேளாண்மை அலுவலகம் தோட்டக்கலைத் துறை அலுவலகம் உள்ளிட்டவை மூடப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 

TAGS
Ambasamudram Corona

Leave a Reply