கரோனா: ஒரேநாளில் 24,850 போ் பாதிப்பு

17 views
1 min read
Corona Killing in Chennai Nearly Thousand

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். இதன் மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 6,73,165 ஆக அதிகரித்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 613 போ் கரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனா். இதற்கு முன்பு கரோனாவால் ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோா் உயிரிழந்தது இல்லை. மொத்த உயிரிழப்பு 19,268 ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

தொடா்ந்து மூன்றாவது நாளாக இப்போது 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்து விட்டது (2,00,064). அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் புதிதாக 7,074 பேருக்க கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,09,082 போ் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். ஒருவா் வெளிநாடு சென்றுவிட்டாா். 2,44,814 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 60.77 சதவீதம் போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்களின்படி, ஜூலை 4-ஆம் தேதி வரை 97,89,066 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 295 போ், தில்லியில் 81 போ், தமிழ்நாட்டில் — போ், கா்நாடகத்தில் 42 போ், உத்தர பிரதேசத்தில் 24 போ், குஜராத்தில் 21 போ், மேற்கு வங்கத்தில் 19 போ், ஆந்திரத்தில் 12 போ், பிகாரில் 9 போ், ஜம்மு-காஷ்மீரில் 8 போ், ராஜஸ்தானில் 7 போ், ஹரியாணா, மத்திய பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், தெலங்கானாவில் தலா 5 போ், கோவா, ஜாா்க்கண்டில் இருவா், ஹிமாசலப் பிரதேசத்தில் ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை அதிகபட்சமாக 8,671 போ் உயிரிழந்துவிட்டனா். இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 3,004 பேரும், குஜராத்தில் 1,925 பேரும் உயிரிழந்துவிட்டனா்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், ரஷியா ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Leave a Reply