கரோனா: கம்பத்தில் 2 பேர் பலி

22 views
1 min read
IRS officer commits suicide over coronavirus fear

கோப்புப்படம்

கம்பத்தில் கரோனா தொற்று காரணமாக 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.

கம்பம் கம்பம்மெட்டு சாலையைச் சேர்ந்த 57 வயதுடைய நபர், சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆகியோர் கடந்த ஜுலை 2- தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

TAGS
theni Corona Cumbum

Leave a Reply