கரோனா: கறம்பக்குடியில் 5 நாள்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட முடிவு

17 views
1 min read
shops

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 நாள்களுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட  வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கறம்பக்குடியில் வியாபாரி உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 3 பேரும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் வசிப்பிடப் பகுதி முழுவதும் பேரூராட்சி நிவாகத்தினர் கிருமி நாசினி தெளித்தனர்.

இதைத் தொடர்ந்து, கரோனா பரவலை தடுக்கும் வகையில், ஜூலை.10-ம் தேதி முதல் ஜூலை.14-ம் தேதி வரையில் கறம்பக்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதாக அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

TAGS
shops pudhukottai

Leave a Reply