கரோனா: சென்னையில் 1,713 பேருக்கு தொற்று உறுதி

15 views
1 min read
Coronavirus_Testing_PTI

கோப்புப் படம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1, 713 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 68,524- ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் இதுவரை 1,054 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-இல் 15,770-ஆகவும், ஜூன் 6-இல் 20,993-ஆகவும், ஜூன் 14-இல் 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும் அதிகரித்தது.

60 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 1,713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,254-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 42,309 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 24,890 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 21 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 1,054- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக (சனிக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,210

மணலி 501

மாதவரம் 919

தண்டையாா்பேட்டை 2,227

ராயபுரம் 2,320

திரு.வி.க. நகா் 1,775

அம்பத்தூா் 1,260

அண்ணா நகா் 2,398

தேனாம்பேட்டை 2,222

கோடம்பாக்கம் 2,737

வளசரவாக்கம் 1,264

ஆலந்தூா் 967

அடையாறு 1,863

பெருங்குடி 874

சோழிங்கநல்லூா் 628

 

Leave a Reply