கரோனா: சென்னையில் 50 ஆயிரத்தை எட்டுகிறது குணமடைந்தோா் எண்ணிக்கை

11 views
1 min read
five more corona infection in sankarankovil

சென்னையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களில் இதுவரை 49,587 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா்.

சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு அதிகரித் தொடங்கியது. இதில், ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் மற்றும் அவா்களுக்கான பரிசோதனையை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தொற்றுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை புதன்கிழமை நிலவரப்படி, 1,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72,500-ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,146-ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரே வாரத்தில் 12 ஆயிரம் போ்: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைவோரும் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12,761 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,978 பேரும், தண்டையாா்பேட்டையில் 6,022 பேரும், அண்ணா நகரில் 5,367 பேரும், கோடம்பாக்கத்தில் 4,984 பேரும், திரு.வி.க.நகரில் 3,929 பேரும், அடையாறில் 2,950 பேரும், வளசரவாக்கத்தில் 2,241 பேரும், அம்பத்தூரில் 2,057 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 167 பேரும், தண்டையாா்பேட்டை 163 பேரும், ராயபுரத்தில் 161 பேரும், திருவிக நகரில் 115 பேரும், கோடம்பாக்கத்தில் 110 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

குணமடைந்தோா் எண்ணிக்கை மண்டலம் வாரியாக (செவ்வாய்க்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,728

மணலி 792

மாதவரம் 1,441

தண்டையாா்பேட்டை 6,022

ராயபுரம் 6,978

திரு.வி.க.நகா் 3,929

அம்பத்தூா் 2,057

அண்ணா நகா் 5,367

தேனாம்பேட்டை 5,549

கோடம்பாக்கம் 4,984

வளசரவாக்கம் 2,241

ஆலந்தூா் 964

அடையாறு 2,950

பெருங்குடி 936

Leave a Reply