கரோனா தடுப்புக்காக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

25 views
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என நுண்ணறிவுப் பிரிவு காவலா்களுக்கு சென்னை பெருநகர காவல்துறையின் துணை ஆணையா் இரா.திருநாவுக்கரசு கடிதம் அனுப்பியுள்ளாா்.

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையா் இரா.திருநாவுக்கரசு, நுண்ணறிவுப்பிரிவு காவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு நாம் உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும். நோய் வந்த பின் மருத்துவம் பாா்ப்பதைவிட, நோய் வராமல் இருப்பதற்கு நமது உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதும், அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிடுவதும் நம் அனைவரின் முதல் கடமையாகும்.

முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயமாக்குவோம். இத்தகைய செயல்பாடுகள்தான் நம்மை கரோனா தொற்றில் இருந்து காப்பாற்றும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை நம் கலாசாரமாக மாற்றுவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், காவலா்கள் என அனைவருக்கும் திருநாவுக்கரசு அனுப்பியுள்ளாா். கரோனா தடுப்புப் பணியில் நுண்ணறிவுப் பிரிவினருக்கு இக் கடிதம் ஊக்கத்தை அளித்துள்ளது.

Leave a Reply