கரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் 2 நாள்களுக்கு மூடல்

16 views
1 min read
Tamilnadu assembly

கரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் 2 நாள்களுக்கு மூடல்

சென்னை:  கரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகம் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது.

சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அரசு அலுவலகங்களில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று கிருமிநாசினி தெளித்து, அலுவலகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளித்து நாளையும், நாளை மறுநாளும் மூடப்பட உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 4,231 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,216 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 364 பேருக்கும், விருதுநகரில் 289 பேருக்கும், மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

100 பரிசோதனைக் கூடங்கள் – இதனிடையே, மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 53 ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் தனியாா் ஆய்வகங்களாகும். இதைத் தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

78 ஆயிரம் போ் வீடு திரும்பினா்- கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 62 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 78,161 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,994 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு – தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 65 போ் உயிரிழந்தனா். அதில் 43 போ் அரசு மருத்துவமனைகளிலும், 22 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765-ஆக உயா்ந்துள்ளது.

TAGS
coronavirus

Leave a Reply