கரோனா: தில்லி, கர்நாடக நிலவரம்

17 views
1 min read
Delhi, Karnataka Corona Update

தில்லி மற்றும் கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. (கோப்புப்படம்)

தில்லி மற்றும் கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

தில்லி:

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,008 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 2,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,831 ஆக உயர்ந்துள்ளது. இதில் 74,217 பேர் குணமடைந்துள்ளனர். 3,165 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 25,449 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கர்நாடகம்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,498 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,098 பேர் குணமடைந்துள்ளனர். 416 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 15,297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு சிகிச்சையில் உள்ளவர்களில் 279 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply