கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ வீடு திரும்பினார்

16 views
1 min read
The AIADMK MLA has returned home after recovering from the corona infection

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். 

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த கே.பழனி(57) பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு உடல் சோர்வு இருந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கே.பழனியின் மனைவி  விஜயா, மகள் திவ்யா ஆகியோரும் கரோனா தொற்று உறுதியான நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது சிகிச்சை பெற்று முழுவதுமாக குணமடைந்த நிலையில் எம்எல்ஏ கே.பழனி வீடு திரும்பியுள்ளார். அவருக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply