கரோனா தொற்றுக்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பலி

21 views
1 min read
sn

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கன்று பலியானார்.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சாமிநாதன்.
 இவருக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா பரிசோதனை நடைபெற்று கரோனா உறுதியான நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிலநாள்களில் உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 10 நாள்களாக செயற்கை சுவாசம் அவருக்கு தரப்பட்டது.

இந்நிலையில் ஞாயிறன்று அவர் பிளாஸ்மா சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கடந்த 2 ஆண்டுகள் பணியாற்றி அனைவரின் நன்மதிப்பை பெற்ற சாமிநாதன் கரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
 

TAGS
Tiruvallur Corona Death

Leave a Reply