கரோனா தொற்று உறுதி: நான்காவது மாடியில் இருந்து குதித்த பத்திரிகையாளர்!

20 views
1 min read
scribe jumped from 4th floor in aiims

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்     ஒருவர், மன அழுத்தத்தினால் நான்காவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

 

புது தில்லி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்     ஒருவர், மன அழுத்தத்தினால் நான்காவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக தில்லி தென் மேற்கு பகுதிக்கான காவல்துறை துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா கூறியதாவது:

37 வயதான அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர் கரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த மாதம் 24-ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உயர் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நான்காவது மாடியில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டில் தனியறையில் அனுமதித்துள்ளனர். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கற்பனை உருவங்கள் கண்ணில் தெரிவதாக கூறியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் திங்கள் மதியம் 2.00 மணியளவில் அவர் நான்காவது  மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அவரது அறையில் உள்ள கழிவறை ஜன்னலில் இருந்த இரும்பு கிரில் கம்பி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக அவர் வெளியே குதித்துள்ளார் என்று தெரிகிறது.

தற்போது அவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply