கரோனா தொற்று: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே. பழனி

19 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_3

வீடு திரும்பினார் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே. பழனி

 

ஸ்ரீபெரும்புதூர்: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி சிகிச்சை முடிந்து 25 நாட்களுக்கு பிறகு செவ்வாய்கிழமை வீடு திரும்பினார். 

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கே.பழனி மட்டுமே வெற்று பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கரோனை வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு  நிவாரண பொருட்களை தினமும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி எம்எல்ஏ பழனிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து 25 நாட்களுக்கு பிறகு செவ்வாய்கிழமை வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு அதிமுக மாவட்டதுணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ராமசந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply