கரோனா தோற்று நடவடிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் 19-ஆம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடல் 

19 views
1 min read
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்கள்

பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்கள்

 

கருணா தொற்று பரவலைத் தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் நாளை வியாழக்கிழமை முதல் (ஜூலை 9) முதல் 19 ஆம் தேதி வரை மூடப்படும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: தற்போது பட்டாசு ஆலைகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கரோனா புற்று அதிகமாக பரவி வருகிறது எனக் கூறப்படுகிறது. இதனால் தினசரி பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூட்டம் புதன்கிழமை தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோணா பரவலை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளை ஜூலை 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை மிகவும் முக்கியமானதாகும் பட்டாசு ஆலைகள் மூடப்படுகிறது என அவர் கூறினார்

Leave a Reply