கரோனா நோயாளிகளின் உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

15 views
1 min read
rules Burial of Corona Patients Body: Court Order to Govt

கரோனா நோயாளிகளின் உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. 
மருத்துவர் உடல் அடக்கத்தை எதிர்த்து வன்முறையில்  ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply