கரோனா பரவலைத் தடுக்க திருப்பரங்குன்றம் பகுதிக்குச் செல்ல தடை

21 views
1 min read
thiruparankunram

திருப்பரங்குன்றம் கோயில்

 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 

திருப்பரங்குன்றம் பகுதியை பொருத்தவரை இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் உதவிப் பொறியாளர் முருகன் உதவி செயற்பொறியாளர் சேவியர் ஆகியோர் தலைமையில் திருப்பரங்குன்றம் நகர்ப் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில் காய்ச்சல், சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று உறுதியாகும் நிலையில் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் நகரின் நுழைவாயில் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தி நகருக்குள் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல திருநகர் பகுதி மக்களும், ஹார்விபட்டி பகுதி மக்களும் அந்த பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

TAGS
கரோனா 

Leave a Reply