கரோனா பரவல்: சென்னை சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைப்பு

20 views
1 min read
chennai traffic

கரோனா பரவல்: சென்னை சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைப்பு

சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கியச் சாலை சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில், வாகன ஓட்டிகள் அதிகம் நேரம் நிற்பதால், கூட்டம் சேரும் வாய்ப்பு ஏற்பட்டு, கரோனா தொற்றுப் பரவும் அபாயம் உருவாகும் என்பதால் சோதனை முயற்சியாக இந்த நடவடிக்கையை போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாம்.. கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது: பிரதமர் மோடி

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க 10க்கும் மேற்பட்ட முக்கியச் சாலை சந்திப்புகளில் சிக்னல்களில் முதற்கட்டமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 60 நொடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்.. கரோனா: மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் சிறிய மாநிலங்கள்

இதனால், வெகு நேரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிவது தவிர்க்கப்படும் என்றும், சிக்னல்களில் நேரத்தைக் குறைக்குமாறும் போக்குவரத்துக் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

TAGS
coronavirus

Leave a Reply