கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம்

15 views
1 min read
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க கோரி சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஒருவருக்கு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.அதன் முடிவுகள் வெளியாவதற்கு ஆறு முதல் ஏழு நாட்கள் ஆகிறது. இந்த நாட்களில் பரிசோதனைக்கு உட்பட்டவர் வெளியில் அலைந்து திரிகிறார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் சுற்றி அந்த பகுதிகளில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கருணா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில் கட்சியினர் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்

Leave a Reply