கரோனா பாதிப்பால் நாகை மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு

22 views
1 min read
coronavirus

 

நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் குத்தாலம்  மேல சாலையைச் சேர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களால் பாதிக்கப்பட்ட 62 வயது முதியவர் கடந்த மாதம் சளி, ஜுரம் ஆகிய உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் அவர் திருவாரூர் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில் செவ்வாய் மாலை நெஞ்சுவலி வந்து முதியவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இந்நிலையில், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவு வெளிவந்ததில், அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் ஜெனிதாமேரி, பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் மற்றும் சுகாதாரத்துறையினர் இரவோடு இரவாக முதியவரின் வீட்டுக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றிப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS
கரோனா

Leave a Reply