கரோனா பாதிப்பில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தில் இந்தியா

17 views
1 min read
Mumbai_Rains_PTI

ரஷியாவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தில் இந்தியா

கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில், இந்தியா, ரஷியாவை பின்னுக்குத் தள்ளி உலகளவில் 3வது இடத்துக்கு வந்துவிட்டது.

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சமாக  2,12,326-ஐத் தொட்டதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,15,71,720 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு 5,37,045 போ் பலியாகியுள்ளனா். 65,42,708 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 44,91,967 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இதுவரை கரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் இருந்த இந்தியா இன்று 3வது இடத்துக்கு வந்துள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் இருந்த ரஷியாவை இந்தியா இன்று பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,98,817 -ஆக உயர்ந்துள்ளது. 

இதையும் படிக்கலாம்.. இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

இதுவரை ரஷியாவில் 6,87,862 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 4,54,329 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷியாவில், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,161-ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 134 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது. தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. 

TAGS
coronavirus

Leave a Reply