கரோனா பாதிப்பு: ஈரோடு மலைக் கிராம மக்கள் அதிர்ச்சி

18 views
1 min read
corona

                                     

ஈரோட்டில் மலைக் கிராமப் பகுதியில் கரோனா பரவுவதால் மலைக் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.    

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவ தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 26 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 248 ஆக உயர்ந்தது. இதில் 162 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதிதாகப் பாதிக்கப்பட்டதில், ஈரோடு மாநகராட்சியில் 4 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 15 பேரும், கொடுமுடியில் 2 பேரும், பவானிசாகரில் ஒருவரும், தாளவாடியில் ஒருவரும், சத்தியமங்கலத்தில் 2 பேரும், பவானியில் ஒருவரும் உள்ளனர்.

இது தவிரக் குழந்தைகள், சிறுவர்,சிறுமிகளையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கொடுமுடியில் ஒரு வயது பெண் குழந்தைக்கும், ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் 5 வயது ஆண் குழந்தைக்கும், கோபிசெட்டிபாளையத்தில் 3 வயது ஆண் குழந்தைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு திண்டலில் 7 வயது சிறுமிக்கும், கோபியில் 8 வயது சிறுவனுக்கும் கரோனா தாக்கியது.  இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மேற் கொண்ட சோதனையில் பெரும்பாலும் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் தங்கள் குழந்தைக்கு எவ்வாறு பரவியது என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. 

2ஆவது கட்டமாக மாவட்டத்தில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று முதலில் ஈரோடு மாநகராட்சியை ஆட்டி படைக்க முயன்றது. ஆனால் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக தொற்று பரவுதல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

அதேசமயம் கோபிசெட்டிபாளையத்தில் நாளுக்கு நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கும் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மலைக்கிராம பகுதியான தாளவாடியிலும் முதியவர் ஒருவர் நேற்று கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளார். அங்கு முதல் முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மலைப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைக்காக ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கரோனா பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

TAGS
Corona

Leave a Reply