கரோனோ பாதிக்கப்பட்ட பகுதியில் திமுக நிவாரணம்

16 views
1 min read
அரிசி உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை திமுக தெற்கு  மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி

அரிசி உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை திமுக தெற்கு  மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி

 ஈரோடு: ஈரோட்டில் கரோனோ பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1260 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை திமுக தெற்கு  மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி வழங்கினர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த  மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கரோனோவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் திமுக தெற்கு மாவட்டம்  சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனோ வால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்ட பகுதியான ஈரோடு ராஜாஜி புறம்  பகுதிகளில் உள்ள 1260 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கோட்டை பகுதியில் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி கலந்துகொண்டு சுமார் 6 லட்சம் மதிப்பிலான 5 கிலோ அரிசி, மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, பகுதி செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply