கர்நாடகத்தில் கரோனா தொற்று பாதிப்பை வைத்து சூதாட்டம்?

16 views
1 min read
People now betting on COVID-19 cases? Yes, its happening in Karnataka

மைசூரு: தேநீர் கடை வாசலில் நின்று கொண்டிருக்கும் நடுத்தர வயது நபர் ஒருவர், இன்று கர்நாடகாவில் புதிதாக 1,500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படும் என்று கணிக்கிறார்.

தான் கையில் வைத்திருக்கும் செல்லிடப்பேசியில், அவர் இந்த எண்ணிக்கையைக் கூற, மறுமுனையில் இரண்டாயிரம் மற்றும் அதை விட கூடுதல் என்று மற்றொருவர் கூறுகிறார்.

மாநில அரசின் சுகாதாரத் துறை, கரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டதும், அதில் வெளியாகும் எண்ணிக்கைக்கு மிகச் சரியாக இருப்பவர் வெற்றி பெற்றவராகிறார்.

இந்த கணிப்பில் தோற்பவர் உடனடியாக வால்லெட் பேமெண்ட் வழியாக வெற்றியாளருக்கு ரூ.500ஐ அனுப்ப வேண்டும். கரோனா தொற்றால் கிரிக்கெட் சூதாட்டம் ஓரளவுக்கு ஓய்ந்திருந்த நிலையில், பொதுமக்கள் பலரும் கரோனா சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐபிஎல், கிரிக்கெட் போட்டிகள், தேர்தல் என எதை வைத்தும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பல், கரோனா தொற்றால் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது கரோனாவை வைத்தே சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இன்று கர்நாடகாவில் எத்தனை பேருக்கு கரோனா பாதிக்கும்?
இன்று எந்த மாவட்டத்தில் அதிக பாதிப்பு இருக்கும்? என்பது போன்ற சில கேள்விகள் அந்த சூதாட்டத்தில் இடம்பெறுகிறது.

இது பெரிய அளவில் நடைபெறவில்லை என்றாலும், தற்போது மழைய மைசூரு, சாமராஜாநகர் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் நடக்கிறது. இது ரூ.100ல் இருந்து ரூ.500 வரை சூதாட்டம் நடைபெறுகிறது.
 

TAGS
coronavirus

Leave a Reply