கர்நாடகத்தில் சமூகப் பரவல்? – பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரின் பேச்சு

19 views
1 min read
JC_Madhuswamy

 

கர்நாடகத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதாக அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

தும்கூர் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சமூக அளவில் கரோனா பரவுவதாக நாங்கள் நினைக்கிறோம்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தாலும் மாவட்ட அதிகாரிகளுக்கு இது கடினமான பணியாகவே இருக்கிறது. நிலைமை கைமீறி போய்விட்டது என்றார். 

எனினும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆகியோர் அமைச்சர் ஜே.சி.மதுசாமியின் கூற்றை மறுத்துள்ளனர். 

TAGS
coronavirus

Leave a Reply