கர்நாடகத்தில் புதிதாக 2,228 பேருக்கு கரோனா

16 views
1 min read

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,228 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,228 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,228 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,105 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 957 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,833 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 17,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 457 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply