கர்நாடகத்தில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

18 views
1 min read
coronatest2062 new COVID 19 cases and 54 deaths reported in Karnataka in the last 24 hours

​கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று (செவ்வாய்) மாலை 5 மணி முதல் இன்று (புதன்) மாலை 5 மணி வரை புதிதாக கரோனா தொற்றால் பாதித்தோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 2,062 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,877 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 54 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,876 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 16,527 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பெங்களூரு மாநகரப் பகுதியில் மட்டும் புதிதாக 1,148 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அதிகபட்சமாக பெங்களூரு மாநகரப் பகுதியில் மட்டும் 12,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply