கர்நாடகத்தில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு !

20 views
1 min read
karnataka corona count crosses 25k

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 

பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுதொடர்பாக திங்கள் இரவு மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் திங்களன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 25,317 ஆக உயந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 30 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு 401 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply