கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று

54 views
1 min read
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவரின் மகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது . எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து எடியூரப்பா அனுமதிக்கப்பட்டுள்ள பெங்களூரு மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மகன் விஜயேந்தரா மற்றும் மற்றொரு மகளான உமாதேவி ஆகியோருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் காவேரி வீட்டில் செயல்பட்ட அலுவலகத்தில் பணியாற்றிய சமையல்காரர் உட்பட 6 பணியாளர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரின் அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
I have been tested positive for #Covid19 & also been admitted to the hospital on the advice of doctors as a precaution.
I request all those who had come in contact with me to check out for symptoms & to quarantine themselves.

— Siddaramaiah (@siddaramaiah) August 4, 2020

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply