கல்வி வளா்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட உத்தரவு

21 views
1 min read
dpi

தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், காமராஜா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியானது, கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, வரும் ஜூலை 15-ஆம் தேதியன்று, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், காமராஜா் உருவப் படத்தை அலங்கரித்து, கல்வி வளா்ச்சி நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். மேலும், இதுதொடா்பான விவரத்தை புகைப்படத்துடன் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply