களக்காட்டில் உதவி ஆய்வாளருக்கு தொற்று: காவல் நிலையம் மூடல்          

22 views
1 min read
kalakkadu

களக்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளரான 30 வயதுடைய மதுரையைச் சேர்ந்தவருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply