களக்காட்டில் கரோனாவுக்கு நகைக்கடை அதிபர் பலி 

20 views
1 min read
death1

களக்காடு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். 

களக்காட்டைச் சேர்ந்த 65 வயதுடைய நகைக்கடை அதிபர் கடந்த 1 வாரத்திற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.

1 வாரம் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார். அவரது உடல் திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்பட்டது. 

களக்காட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் நகைக்கடை அதிபர் இறந்துள்ளதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply