கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய இயந்திரங்கள்: முதல்வர் அசோக் கெலாட்

17 views
1 min read
No manual cleaning of sewage chambers in Rajasthan, says CM Ashok Gehlot

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

 

ராஜஸ்தானில் கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்வதில் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

எந்த துப்புரவுப் பணியாளரும் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்றும் இனியொரு கழிவுநீர் தொட்டி மரணம் நம் மாநிலத்தில் ஏற்படக்கூடாது என்றும் அதிகாரிகளுடனான காணொலி மாநாட்டில் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், ‘துப்புரவுப் பணியாளர்களின் அயராத பணியினால் இன்று மாநிலத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை ஈடு இணையற்றது. இந்தியாவில் முதல்முறையாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டை ராஜஸ்தான் அரசு வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார். 

TAGS
ராஜஸ்தான்

Leave a Reply