கவரப்பேட்டையில் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

16 views
1 min read
kavarapettai

 

மறைந்த முதுபெரும் தலைவர் நாவலர் நெடுஞ்செழியனின் 100வது பிறந்த நாள் விழா திமுக சார்பில் கவரப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணாவிற்கு அடுத்தபடியாக திமுகவில் பெரிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அண்ணா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவரும், அண்ணாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் எம்ஜிஆர் ஆட்சியில்  முக்கிய அமைச்சராக கருதப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனின் 100 வது பிறந்தநாள் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்வை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு பங்கேற்று நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் மாவட்டபிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக நிர்வாகிகள் கருணாகரன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply