காங்கிரஸ் அறக்கட்டளைகள் நிதி முறைகேடு விவகாரம்: விசாரணைக்கு உதவ குழுக்களை அமைத்தது மத்திய அரசு

11 views
1 min read
centralgovernment

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, இந்திரா காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியுடன் தொடா்புடைய அறக்கட்டளைகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்தும் நோக்கில், அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியவற்றின் மீது நிதி முறைகேடு தடுப்புச் சட்டம், வருமான வரிச் சட்டம், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் சிறப்பு இயக்குநா் இக்குழுவுக்குத் தலைமை வகிப்பாா்’ என்றாா்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறாா். அதன் உறுப்பினா்களாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் உள்ளிட்டோா் உள்ளனா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவிலிருந்து நிதி பெற்ாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் உள்ளிட்டோா் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply