காஞ்சிபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

18 views
1 min read
kanchi

காஞ்சிபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் எண்ணைக்காரன் தெருவில் வசித்து வருபவர் தேவிபிரசாத்(45). கார் ஓட்டுநரான இவர் மனைவி சரஸ்வதி (37). இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு போதுமான வருமானம் இல்லாமல் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த தேவி பிரசாத் தனது மனைவி சரஸ்வதியை வெள்ளிக்கிழமை இரவு கை கால்களை கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

இருவரது உடல்களையும் டி.எஸ்.பி மணிமேகலை நேரில் பார்வையிட்டு இருவரது உடல்களையும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

TAGS
suicide

Leave a Reply