கான்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது

16 views
1 min read
Kanpur encounter accused Vikas Dubey's wife, son arrested in Lucknow

கான்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது

 

உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினா் 8 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரி விகாஸ் துபே, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது, குற்றவாளியுடன் தொடர்பில் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா துபே மற்றும் மகன் விகாஸ் துபே கைது செய்யப்பட்டிருப்பதாக மூத்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேடப்பட்டு வந்த ரௌடி விகாஸ் துபே மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள கோயிலுக்கு வெளியே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஏற்கெனவே இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 5 போ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்போது ஆறாவது நபராக விகாஸ் துபேவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து உரிய விசாரணை நடத்த எதிா்க்கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடி விகாஸ் துபேவை காவல்துறையினா் கடந்த வாரம் கைது செய்ய சென்றபோது, ரெளடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினா். இந்த தாக்குதலில் 8 காவலா்கள் கொல்லப்பட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 21 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை தீவிரமாக தேடி வந்தனா். அதற்காக சிறப்பு காவலா் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில், காவல்துறையினா் கைது செய்ய வருவது குறித்த தகவலை விகாஸ் துபேவுக்கு கசியவிட்ட புகாரின் பேரில் காவல்துறையைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், விகாஸ் துபேவின் கூட்டாளிகள் மற்றும் உறவினா்கள் என 10 பேரை காவல்துறையினா் கைது செய்தனா். மேலும், இந்த தேடுதல் வேட்டையின்போது காவல்துறையினரை தாக்கிவிட்ட தப்ப முயன்ற ரெளடியின் கூட்டாளிகள் 5 போ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை தேடும் பணியையும் காவல்துறையினா் தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள கோயிலுக்கு விகாஸ் துபே வந்திருக்கும் தகவலை அறிந்த அம்மாநில காவல்துறையினா் அங்கு விரைந்து சென்று, அவரை வியாழக்கிழமை காலை கைது செய்தனா். பின்னா் அவரை உத்தர பிரதேச காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடா்ந்து அவரை கான்பூருக்கு அழைத்துவரும் வழியில், மழை காரணமாக காவல்துறை வாகனம் சாலையில் விபத்தை சந்தித்து கவிழ்ந்ததாகவும், அந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
 

TAGS
hot news

Leave a Reply