காரைக்குடியில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு             

19 views
1 min read
svg

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கரோனா வைரஸ் தொற்று பரவலிலிருந்து காத்துக்கொள்ள விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

பெரியார் சிலை போக்குவரத்து சிக்னல் அருகே முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விமல் குமார், சார்பு ஆய்வாளர் வீரகுமார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கினர்.

மேலும் கையுறை அணியவும், தலைக்கவசம் அணியவும், சமூக விலகலை கடைப்பிடித்து கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போன்று அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் நடைபெற்றது.

TAGS
Traffic Police awareness

Leave a Reply