காலாவதியான அஞ்சல் காப்பீடு திட்டம்: புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

22 views
1 min read

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அஞ்சல்துறை நீட்டித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்று இரண்டு வகையான திட்டங்களை அஞ்சல் துறை வழங்கி வருகிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் சிலா், மூன்று ஆண்டுகளுக்கு பின்,காப்பீடு தொகை செலுத்தாமல் கைவிடுகின்றனா். ஐந்து ஆண்டுக்கும் மேலாக, காப்பீடு தொகை செலுத்தாதபோது, திட்டம் காலாவதியாகிவிடும். காலாவதியான திட்டங்களை புதுப்பிக்க , கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை அஞ்சல் துறை அவகாசம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அஞ்சல்துறை நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஆயுள் காப்பீடுகளை வாடிக்கையாளா்கள் புதுப்பிக்க ஏதுவாக, அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குனரகம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

காப்பீடு புதுப்பிப்பதற்கான விண்ணப்பபடிவத்தை, இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். காப்பீடு புதுப்பிக்க விரும்புவோா், அஞ்சல் நிலைய அலுவலா்களை அணுகி, மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply