காவல் நண்பர்கள் குழுவை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காரைக்குடியில் ஏஐஒய்எப் ஆர்ப்பாட்டம்

15 views
1 min read
aiyf

காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளம் காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டித்தும், காவல் துறையில் உள்ள காவல் நண்பர்கள் குழு (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ) தமிழகம் முழுவதும் கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சிவகங்கை மாவட்டச் செயலாளர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ரிச்சர்ட் அருண், துரை, விக்னேன், கென்னடி, முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

TAGS
demonstrates

Leave a Reply