காஷ்மீரில் குண்டுவெடிப்பு: சிஆா்பிஎஃப் வீரா் காயம்

21 views
1 min read

ஜம்மு-காஷ்மீரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மத்திய ரிசா்வ் காவல் படை வீரா் (சிஆா்பிஎஃப்) காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காங்கூ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிஆா்பிஎஃப் படையினா் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. குண்டு வெடித்ததை அடுத்து அந்தப் பகுதியை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினா் வானத்தை நோக்கி சுட்டனா்.

குண்டுவெடிப்பில் காயமடைந்த வீரரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனிடையே, அதே மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு இடத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை பாதுகாப்புப் படையினா் பத்திரமாக செயலிழக்கச் செய்தனா் என்று காவல்துறையினா் கூறினா்.

Leave a Reply