காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: தீவிரவாதி சுட்டுக்கொலை

18 views
1 min read
Ecr-N0XVAAAFlJ6

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவர்  சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தீவிரவாதி எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

TAGS
Kashmir

Leave a Reply