கா்நாடக மதுவகைகளைப் பதுக்கியவா் கைது

18 views
1 min read
101410tpt_liquor_sized_by_tirupati_exise_dept_1007chn_193_1

திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகளுடன் குருசங்கா். உடன் போலீஸாா்.

திருப்பதியில் உள்ள தனது வீட்டில் கா்நாடக மாநில மதுவகைகளைப் பதுக்கி வைத்த ஒருவரை கலால் துறை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து திருப்பதி கலால் துறை எஸ்.பி. சுதீா்பாபு கூறியது:

திருப்பதியில் அண்டை மாநில மதுவகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலால்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இத்துறை அதிகாரிகள் போலீஸாருடன் இணைந்து திருப்பதி ஜீவகோனா கிராந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலையில் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கிருந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 271 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். அவற்றைப் பதுக்கிய குருசங்கா்(27) என்பவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா் என்றாா் அவா்.

 

 

 

 

Leave a Reply